போதையில் கார் ஓட்டி விபத்து.. பிரபல நடிகர் கைது - போலீசாரையும் தாக்கியதால் பரபரப்பு!
மலையாள சின்னத்திரை உலகில் நகைச்சுவை மற்றும் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் சித்தார்த் பிரபு, குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு (டிசம்பர் 25, 2025), நடிகர் சித்தார்த் பிரபு கோட்டயத்திலிருந்து தனது காரில் வந்து கொண்டிருந்தார். கார் அதிவேகமாக வந்ததாகக் கூறப்படும் நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு லாட்டரி வியாபாரி மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த வியாபாரிக்குத் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

விபத்து நடந்தவுடன் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் திரண்டு காரை மறித்தனர். காரிலிருந்து இறங்கிய நடிகர் சித்தார்த் பிரபு, நிதானமின்றி இருந்ததோடு தட்டிக்கேட்ட பொதுமக்களை ஆபாசமாகத் திட்டித் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த லாட்டரி வியாபாரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடிகரிடம் விசாரணை நடத்த முயன்றபோது, போதை தலைக்கேறிய நிலையில் இருந்த சித்தார்த் பிரபு போலீசாரையும் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகரின் நடவடிக்கையால் சந்தேகமடைந்த போலீசார், அவரை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். சோதனையில் அவர் மது அருந்தியிருந்தது (Drunken Drive) உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கேரளாவில் மிகவும் பிரபலமான 'தட்டீம் முட்டீம்' (Thatteem Mutteem) என்ற நகைச்சுவைத் தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சித்தார்த் பிரபு. நடிப்பைத் தவிர 'பிரபு செக்யூரிட்டி' என்ற பெயரில் தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
