போதையில் ஓட்டுநர் அட்டூழியம்... வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கார் மோதி உயிரிழப்பு!

 
காவலர் பலி

சென்னை பள்ளிக்கரணை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அதிவேகமாக வந்த கார் மோதியதில் போக்குவரத்து முதன்மைக் காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மானவி தற்கொலை

தமிழகத்தில் போதைப் பழக்கத்திற்கு அதிகமாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறது. பல குற்றச்செயல்களுக்கு போதைப் பழக்கம் தான் காரணமாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் சென்னை மடிப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து முதன்மைக் காவலர் மேகநாதன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த ஒரு காரை அவர் மறித்துள்ளார். ஆனால் அந்தக் கார் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் மேகநாதன் அந்தக் காரைத் தனது இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றுள்ளார். பள்ளிக்கரணை அருகே, சாய்ராம் என்பவர் ஓட்டிச் சென்ற அந்தக் கார், மேகநாதனின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் மேகநாதன் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், காவலர் மேகநாதனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான சாய்ராமைப் பிடித்து விசாரித்ததில் அவர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் குறித்துச் சென்னை மாநகர காவல்துறை உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!