போதையில் மிதந்த சப்-இன்ஸ்பெக்டர் உயர் அதிகாரிக்கே மிரட்டல்... வைரல் வீடியோ!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ஹசரத்கஞ்ச் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் அதிகாரியே மது போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமித் ஜெய்ஸ்வால் என்ற அந்த துணை ஆய்வாளர் (SI), மது போதையில் தனது காரை ஓட்டி வந்து அங்கிருந்த போக்குவரத்து தடுப்புகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதைத் தட்டிக்கேட்ட சக காவலர்களிடம் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையைத் தொடங்கியுள்ளார்.
In Lucknow, during New Year's, a sub-inspector in civil dress drove his car onto the traffic barricading and got into an altercation with the DCP Traffic
— Megh Updates 🚨™ (@MeghUpdates) January 1, 2026
The police arrested the sub-inspector and sent him to Hazratganj police station, bottles of alcohol were recovered from the… pic.twitter.com/ATz5cerm28
அங்கு போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்ய அமைக்கப்பட்டிருந்த மாற்றுப் பாதையில் செல்ல மறுத்த அந்த அதிகாரி, சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து துணை ஆணையர் (DCP) கமலேஷ் தீட்சித்திடமே மிகவும் அநாகரீகமாகப் பேசி, மிரட்டல் விடுத்துள்ளார். ஒரு உயரதிகாரி என்றும் பாராமல் போதை தலைக்கேறிய நிலையில் அவர் செய்த அட்டகாசம் அங்கிருந்த பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. இதையடுத்து, சக போலீசார் அமித் ஜெய்ஸ்வாலை சுற்றி வளைத்து அவரது காரைச் சோதனையிட்டபோது, காருக்குள் மது பாட்டில்கள் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனடியாகக் கைது செய்யப்பட்ட அந்த அதிகாரிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. பொதுமக்கள் மற்றும் சக அதிகாரிகளிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதற்காக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், "வேலியே பயிரை மேய்ந்த கதை" எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
