தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் மிதமான மழை!
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இத்தாழ்வு நிலை இலங்கையை கடல்பகுதி நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ் நாடு காவிரி டெல்டா மாவட்டங்களைத் தவிர, பெரும்பாலான இடங்களில் இன்று வறண்ட வானிலை நிலவுகிறது.

நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மிதமான முதல் கனமழை வரை இடையிலான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. விவசாயிகள் இந்த மாவட்டங்களில் வேளாண்மை பணிகளை இன்றும், நாளையும் தள்ளி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் வேளாண்மை பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ளலாம்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: 09-10.12.2025 அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 35–45 கிமீ வேகத்தில் வீசக்கூடும்; இடையிடையே 55 கிமீ வேகம் எதிர்பார்க்கப்படுகிறது. 11.12.2025 அன்று குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் இதே வேகத்துடன் சூறாவளி காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
