முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதி டி.எஸ்.பி காயம்... பீகாரில் பரபரப்பு!

 
நிதிஷ்குமார்

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனத் தொடரில் வந்த கார் மோதியதில், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் டி.எஸ்.பி (DSP) காயம் அடைந்த சம்பவம் பாட்னாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கின் 359-வது பிறந்தநாள் விழா பாட்னாவில் உள்ள புகழ்பெற்ற 'சாகீப் குருத்வாராவில்' கோலாகலமாகத் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் நிதிஷ்குமார் நேற்று அந்த குருத்வாராவுக்குச் சென்றார். அவருக்குப் பாதுகாப்பாக 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் பின் தொடர்ந்தனர்.

பீகார் நிதிஷ்குமார்

பாட்னாவின் டிடர்கஞ்ச் பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. முதல்வரின் பாதுகாப்பு வாகனத் தொடரில் இருந்த ஒரு கார், அங்கிருந்த ஒரு குறுகிய இடத்தில் ரிவர்ஸ் (Reverse) எடுக்க முயன்றது. அப்போது, அந்த வாகனத்தின் பின்னால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் டி.எஸ்.பி நிற்பதை ஓட்டுநர் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வாகனம் மோதியதில் நிலைதடுமாறி விழுந்த டி.எஸ்.பி-க்கு உடலில் காயம் ஏற்பட்டது.

விபத்து நடந்தவுடன் அங்கிருந்த சக போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் உடனடியாக காயமடைந்த அதிகாரியை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பீகார் நிதிஷ்குமார்

ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முதல்வரின் பயணத்தின் போது இத்தகைய விபத்து நேரிட்டது பாதுகாப்பு வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!