துபாய் பட்டத்து இளவரசர் இன்று இந்தியா வருகிறார்.. பிரதமர் மோடியுடன் மதிய விருந்து!

துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் இரண்டு 2 நாள் அரசு முறை பயணமாக இன்று ஏப்ரல் 8ம் தேதி இந்தியா வருகிறார். பிரதமர் மோடியுடன் மதிய விருந்தில் கலந்துக் கொள்கிறார்.
இன்று பிரதமர் மோடியைச் சந்திக்க இருக்கும் துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான், இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதையடுத்து துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்கிறார். ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா இடையேயான உறவு, வர்த்தகம், தொழில் உள்பட பல்வேறு துறைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
நாளை மும்பையில் நடைபெற உள்ள இந்தியா - ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபர்கள் கூட்டத்தில் துபாய் பட்டத்து இளவரசர் பங்கேற்க உள்ளார்.
ஐக்கிய அமீரக துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் ஷேக் ஹம்தான் முக்கிய பதவிகளை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!