துபாய் சர்வதேச விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடல் !
துபாய் சர்வதேச விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக இயங்காது என ஐக்கிய அரபு அமீரகம் அரசு அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட விமானங்கள் குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அவசர சேவைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் உயர் எச்சரிக்கையில் உள்ளன. விமான சேவைகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பயணிகள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
