துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் வெடிப்பு... இந்தியர் உட்பட 4 பேர் காயம்!

 
dubai dubai

ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடா நாடுகளை குறிவைத்து ஈரான் ஏராளமான ட்ரோன்களை ஏவியுள்ளது. அவற்றில் சில ட்ரோன்கள் துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே விழுந்து வெடித்தன. இந்த சம்பவத்தில் இந்தியர் உட்பட 4 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலால் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட நகரங்களின் விமான நிலையங்களில் ட்ரோன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டு அல்லது தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் விமான நிலையங்களில் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

வளைகுடா நாடுகளில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் அவர்களிடையே அச்சம் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!