70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த துர்கா ஸ்டாலின்.. அசந்துபோகும் அளவுக்கு சீர் வரிசைப் பொருட்கள் !

 
துர்கா ஸ்டாலின்

முதலமைச்சரும் தமது கணவருமான மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளை ஒட்டி 70 ஜோடிகளுக்கு அசந்துபோகும் அளவுக்கு சீர்வரிசை கொடுத்து திருமணம் நடத்தி வைத்துள்ளார் துர்கா ஸ்டாலின்.

முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு, அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், கடந்த 1ஆம் தேதி முதல் முதல்வரின் மனிதநேய திருநாள் எனும் தலைப்பில் 40 நாட்களுக்கு 70க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

துர்கா ஸ்டாலின்

இதன் ஒரு பகுதியாக, நேற்று காலை 70 ஜோடிகளுக்கு இலவச திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்திருக்கிறார். மணமக்களை வாழ்த்தி மாங்கல்யத்தை தனது கையால் எடுத்துக் கொடுத்தார் துர்கா ஸ்டாலின். பின்னர் மலர் தூவி ஆசிர்வதித்தார்.

70 ஜோடிகளுக்கும் ₹1 லட்சம் மதிப்பில் தலா 4 கிராம் தங்கத் தாலி, கட்டில், மெத்தை, பீரோ, மிக்சி, கிரைண்டர் உள்பட 36 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இத்திருமணத்தில் பங்கேற்ற மணமக்களின் உறவினர்கள் உள்பட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இதனிடையே மணமக்களுக்கு சொனாட்டா கைக்கடிகாரம் ஒன்றையும் துர்கா ஸ்டாலின் அன்பளிப்பாக தனிப்பட்ட முறையில் அளித்திருக்கிறார். இந்த திருமண விழாவில் 70 மணமக்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர். 

துர்கா ஸ்டாலின்

தனது தங்கை மறைவை தொடர்ந்து திருமண விழா உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் கடந்த 15 நாட்களாக செல்லாமல் சோகத்தில் இருந்த துர்கா ஸ்டாலின், ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி நடத்திவைக்கப்படும் திருமணம் என்பதால் இதில் பழைய உற்சாகத்துடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web