திருக்கோஷ்டியூரில் துர்கா ஸ்டாலின் வழிபாடு - பக்தர்களுடன் கலந்துரையாடல்!
ஆன்மிகப் பயணமாகச் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள துர்கா ஸ்டாலின், இன்று பிப்ரவரி 22ம் தேதி மதியம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோஷ்டியூர் கோயிலுக்கு வருகை தந்தார். கோயிலுக்கு வருகை தந்த அவரைச் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நேரில் வரவேற்றார்.
சவுமிய நாராயண பெருமாள் சன்னதி, திருமாமகள் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் துர்கா ஸ்டாலின் அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டிக் கொண்டார். கோயில் அர்ச்சகர்கள் அவருக்குப் பிரசாதம் வழங்கி கௌரவித்தனர்.

தரிசனம் முடிந்து வெளியே வந்த துர்கா ஸ்டாலினைப் பார்த்த அங்கிருந்த பெண் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் அவரிடம் பேசினர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுடன் புன்னகையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்தில் இருந்து தான் ராமானுஜர் "ஓம் நமோ நாராயணாய" எனும் மந்திரத்தை உலகிற்குப் பொதுவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாகவே துர்கா ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு முக்கியக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தி வருகிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
