புத்தாண்டு கொண்டாட்டம் : தடையை மீறி கடற்கரையில் குளித்த மாணவர்கள் பரிதாப பலி..!!

 
இளைஞர்கள் மரணம்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தடையை மீறி கடலில் குளிக்க சென்ற இளைஞர்கள் பல பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.....

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் உத்தண்டி கடற்கரையில் நண்பர்கள் 3 பேர் அதிகாலை கடலில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மூவரும் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரை மீட்டு சிகிச்சைக்காக ஈஞ்சம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கானத்தூர் அருகே ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில்,  மற்றொருவர் சடலமாகவும் கரை ஒதுங்கியுள்ளனர்.

Kishore

இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர்களில் ஒருவர் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராஜா (25) என்பதும், அவர் ஐடி ஊழியர் என்பதும் தெரியவந்தது. மற்றொருவர் திருக்கோவிலூரைச் சேர்ந்த தாமோதரன் என்பதும் தெரியவந்தது. உயிருடன் மீட்கப்பட்ட ஹரிஹரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பத்திரமாக வீடு திரும்பினார்.

புத்தாண்டின் போது கடற்கரையில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்திருந்த நிலையில், தடையை மீறி இருவர் குளிக்கும் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 30ஆம் தேதி அக்கரை கடற்கரையில் குளித்தபோது இழுத்துச் செல்லப்பட்ட சோழிங்கநல்லூரைச் சேர்ந்த பிரகாஷ் (20) என்பவர் இன்று அதிகாலை உத்தண்டி கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கினார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கானத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Mohana

இதேபோல், நெல்லித்தோப்பு டி.ஆர்.நகரைச் சேர்ந்த சீனிவாசன்-மீனாட்சி தம்பதியின் மகள்கள் மோகனா (16), லேகா (14), கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த நவீன் (16), அவரது நண்பர் ஆகியோர் பழைய துறைமுகம் கடல் பகுதியில் குளித்தபோது ராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று கிஷோர் (16) உட்பட நான்கு மாணவர்களும் காணாமல் போயினர். இவர்களில் மோகனா, லேகா, கிஷோர் ஆகியோரின் உடல்கள் நேற்று வீரம்பட்டினம் கடல் பகுதியில் ஒன்றன் பின் ஒன்றாக கரை ஒதுங்கியது. போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நவீனின் உடல் இன்று அதிகாலை கரை ஒதுங்கியது. இதையடுத்து, 4 பேரின் உடல்களையும் போலீஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web