இன்று காலை வைகுண்ட ஏகாதசிக்கு துவார தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு!

 
திருப்பதி
 

உலகம் முழுவதும் பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (நவம்பர் 27) காலை 10 மணிக்கு துவங்குகிறது. வைகுண்ட துவாரம் வழியாக ஏழுமலையான் தரிசனம் செய்ய, முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்கள் லக்கி டிப் முறையில் மட்டுமே வழங்கப்படுகின்றன. டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1-ஆம் தேதிகளில் நேரடி ஸர்வ தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படாததால், வழக்கமான ஆன்லைன் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி மிக விமரிசையாக நடைபெறும் நிலையில், இந்தாண்டு டிசம்பர் 30 முதல் மாண்ட 10 நாட்களுக்கும் வைகுண்ட வாசல் திறக்கப்பட உள்ளது. இதில் முதல் மூன்று நாட்களும், பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பொது தரிசனம் மூலம் மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஒரு மொபைல் எண்ணில் அதிகபட்சம் நான்கு பேர் வரை லக்கி டிப் பதிவுசெய்யலாம். இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் டிசம்பர் 2-ம் தேதி வெளியிடப்படவுள்ளன.

திருப்பதி

ஜனவரி 2 முதல் 8 வரை ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் மேலும் அன்றைய தினம் ஒன்றுக்கு 15,000 டிக்கெட்கள் என டிசம்பர் 5-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகின்றன. இதேபோல் ஸ்ரீவாணி விஐபி பிரேக் தரிசன டிக்கெட்களும் டிசம்பர் 5 காலை 10 மணிக்கு (ஒரு நாளுக்கு 1,000) வெளியீடு செய்யப்படும். இந்த காலக்கட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகள் உடன் வரும் பெற்றோர் உள்ளிட்ட அனைத்து சிறப்புரிமை தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அரசுப் பதவியாளர்களுக்கு மட்டும் விஐபி பிரேக் அனுமதி வழங்கப்படும் என்றும், ஆர்ஜித சேவைகள் நடைபெறாது என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

லக்கி டிப் முன்பதிவு – முக்கிய தகவல்கள்

  தொடக்கம் : இன்று (நவம்பர் 27) காலை 10 மணி
  முதல் வெளியீடு : டிசம்பர் 30, 31 & ஜனவரி 1 (லக்கி டிப் மட்டும்)
 தேர்வு முடிவுகள் : டிசம்பர் 2 வெளியீடு
 சிறப்பு தரிசனம் : ஜனவரி 2 – 8 (₹300 டிக்கெட்கள்)
 புக் செய்ய : TTD இணையதளம் / மொபைல் ஆப் / வாட்ஸ்அப்

பக்தர்கள் கோடானுகோடி காத்திருக்கும் இந்த நேரத்தில், வைகுண்ட வாசல் வழியாக ஏழுமலையான் தரிசிக்க இந்த வாய்ப்பை தவற விடாமல் முன்பதிவு செய்யுமாறு தி.தி.தே. வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!