5 இ-செலான் வந்தால் லைசென்ஸ் ரத்து? போக்குவரத்துத் துறை எச்சரிக்கை!
நாடு முழுவதும் போக்குவரத்துத் துறை பல புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தினாலும், சாலை விபத்துகள் குறையவில்லை. இதனை கட்டுப்படுத்த ஹெல்மெட் இன்றி ஓட்டுதல், எதிர்திசையில் பயணம், சிவப்பு சிக்னலை மீறுதல் போன்ற விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல சிக்னல் பகுதிகளில் கேமராக்கள் மூலம் விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டு இ-செலான் அனுப்பப்படுகிறது.

டிஜிட்டல் முறையில் கண்டறியப்படும் விதிமீறல்களுக்கான இ-செலான் விவரங்கள் வாகன ஓட்டிகளின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது. இந்த அபராதங்களை ஆன்லைனிலேயே செலுத்தலாம். ஒரே நபருக்கு ஒரு ஆண்டுக்குள் தொடர்ந்து விதிமீறல்கள் ஏற்பட்டால், அவர்களை போக்குவரத்துத் துறை கண்காணிக்கத் தொடங்கும்.

ஐந்து முறைக்கு மேல் இ-செலான் பெற்றவர்கள் மீது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் உடனடியாக உரிமம் ரத்து செய்யப்படாது. உரிய நபர் விசாரணைக்கு அழைக்கப்படுவார். தொடர்ந்து விதிமீறல் நடந்தால், 3 மாதம் முதல் ஓராண்டு வரை லைசென்ஸ் ரத்து செய்ய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
