’சூப்பர் சைக்கிள்’ திட்டம்... ஒரே நாளில் 3,742 இ-சைக்கிள் வழங்கி சந்திரபாபு நாயுடு கின்னஸ் சாதனை!
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதியில் கிராமங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், பெண்கள், மாணவர்களுக்கு இ-சைக்கிள்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கான்பூர் ஐஐடி இணைந்து தயாரித்த இந்த சைக்கிளில் சூரிய சக்தி மூலம் பேட்டரியை சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. ‘சூப்பர் சைக்கிள்’ என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளர்களுக்கு இ-சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
ஜனவரி 31ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 3,742 பேருக்கு இ-சைக்கிள்களை சந்திரபாபு நாயுடு வழங்கினார். இதன் மூலம் ஒரே நாளில் சுமார் 4,000 பேருக்கு இ-சைக்கிள் வழங்கியவர் என்ற கின்னஸ் சாதனையில் அவர் இடம்பிடித்துள்ளார். இதுவரை மொத்தம் 5,555 இ-சைக்கிள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா திட்ட பணியாளர்கள், கிராம நிர்வாக ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த திட்டம் பயன் அளிக்கிறது. இந்த சைக்கிள் மூலம் மாதத்திற்கு ரூ.1,500 வரை எரிபொருள் செலவு குறையும் என்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவும் என்றும் முதல்வர் தெரிவித்தார். அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
