மானிய விலையில் இ-ஸ்கூட்டர் ... முதல்வர் தொடங்கி வைப்பு!
சென்னை தீவுத்திடலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 100 தொழிலாளர்களுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கிக் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய 18 நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, ஊனம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த வாரியங்களில் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
வாரியங்கள் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 47 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.2,341 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அரசு பொறுப்பேற்ற பின் மட்டும் 7.5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்துள்ளனர். மேலும், 60 வயது பூர்த்தியடைந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1200 ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
