அதிகாலையில் தலைநகரில் பரபரப்பு... TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை.!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி வருகிறது. அதன்படி எம்.ஆர்.சி.நகர், அடையாறு, பெசன்ட் நகர் உட்பட 5 இடங்களில் அதிகாலை முதலே இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்னதாக, TVH குழுமம் மீது எந்தவொரு பெரிய சர்ச்சைகள் அல்லது வழக்குகள் பொதுவெளியில் பேசப்படவில்லை . ஆனாலும் அமலாக்கத்துறை சோதனை எந்த வழக்கின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்பது குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
அமலாக்கத்துறை அல்லது TVH குழுமத்தின் சார்பிலும் இந்த சோதனை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. TVH குழுமம் என்பது தமிழ்நாட்டில் பிரபலமான ஒரு ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குடியிருப்பு வளாகங்கள், வணிக கட்டிடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிறுவனம் பல ஆண்டுகளாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பல பெரிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!