ஜப்பான் வடக்கு கடற்கரையில் நிலநடுக்கம் … 33 பேர் படுகாயம், சுனாமி எச்சரிக்கை !

 
நிலநடுக்கம்
 

ஜப்பான் ஹோன்ஷூ தீவின் வடக்குப் பகுதியில் அமோரி கடற்கரையிலிருந்து 80 கி.மீ. தொலைவில், டிசம்பர் 8 இரவு 11.15 மணியளவில் 7.5–7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கூஜி துறைமுகத்தில் சுமார் 2 அடி உயரம் கொண்ட சுனாமி அலைகள் உருவானதாக தகவல்கள் வந்துள்ளன. பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்த முக்கிய நகரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சுனாமி

நிலநடுக்கத்தில் 33 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடற்கரையிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு ஹச்சினோஹே விமானப் படைத் தளத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மின்சாரக் கட்டமைப்புகள் சேதமடைந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது; தற்போது அதிகாரிகள் மீட்பு மற்றும் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலநடுக்கம்

நேற்று விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை இன்று காலை 6.30 மணிக்கு விலக்கப்பட்டது. இருப்பினும், ஆய்வாளர்கள் வருங்கால நாட்களில் அதிர்வுகள் அல்லது பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு 9.0 ரிக்டர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!