2.9 ரிக்டர் அளவில் வங்கதேசத்தில் நிலநடுக்கம்!
Apr 16, 2025, 10:30 IST

வங்கதேசத்தில் புதன்கிழமை காலை 5.07 மணிக்கு 2.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 14 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.9 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டுள்ளன.இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்தவித தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கு முன்பு ஏப்ரல் 11ம் தேதி 10 கிலோமீட்டர் ஆழத்தில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் அதே போன்ற மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web