வங்கதேசத்தில் 5.7 ரிக்டர் நிலநடுக்கம்... கட்டிட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலி!
வங்கதேச நார்சிங்டி மாவட்டத்தில் இன்று காலை 10.08 மணியளவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலத்திலிருந்து 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த அதிர்வால் தலைநகர் டாக்கா உள்ளிட்ட பகுதிகளில் பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இடிபாடுகளில் சிக்கிய 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கடுமையாக காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிந்து விழுந்த கட்டடங்களில் சிக்கியவர்களை மீட்க மீட்புப்படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலநடுக்க அதிர்வுகள் மேற்கு வங்கம், கொல்கத்தா மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியப் பகுதியில் எந்த உயிர் அல்லது பொருள் சேதமும் ஏற்படாதது நிம்மதியை அளிக்கிறது. முன்பு மியான்மரில் மார்ச் 28-ஆம் தேதி ஏற்பட்ட 7.7 ரிக்டர் நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
