பூடானில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... பீதியில் மக்கள்...!
பூட்டான் தேசத்தில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 9.52 மணி அளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரவு நேரத்தில் வீடுகள் குலுங்கியதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அச்சத்தில் வீதிக்கு ஓடி வந்தனர்.
EQ of M: 3.5, On: 01/01/2026 21:52:30 IST, Lat: 27.14 N, Long: 89.05 E, Depth: 5 Km, Location: Bhutan.
— National Center for Seismology (@NCS_Earthquake) January 1, 2026
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/WvR94lkmBE
இந்த நிலநடுக்கமானது நிலப்பரப்பில் இருந்து 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இது 27.14 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 89.05 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் மையம் கொண்டிருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட போது நில அதிர்வு ஒரு சில விநாடிகளுக்கு நீடித்ததால் மக்கள் மிகுந்த கலக்கத்தில் ஆழ்ந்தனர்.
திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் உடைமைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பூட்டான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் இந்த நில அதிர்வின் தாக்கம் உணரப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
