ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை இல்லை!
ஜப்பான் ஷிமானே மாகாணத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் பலர் வெளியில் ஓடிவந்தனர்.

நிலநடுக்கத்தின் தாக்கம் டோஹோகு நகரிலும் உணரப்பட்டது. அங்கு சில சாலைகளில் திடீரென பள்ளங்கள் ஏற்பட்டதால் கார்கள் சேதமடைந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. உயிர் சேதம் குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
