டாக்கா அருகே 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கொல்கத்தா உட்பட இந்தியப் பகுதிகளிலும் நிலஅதிர்வு!

 
நிலநடுக்கம்
 

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே இன்று காலை 10.08 மணியளவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. டாக்கா அருகிலுள்ள நர்சிங்டி பகுதியிலிருந்து தெற்கு–தென்மேற்கில் 13 கிலோமீட்டர் தூரத்தில், புவியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம்

இதற்கு முன்னதாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, டாக்கா நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் கொல்கத்தா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீ…..ண்ட நிலநடுக்கம்! நாசா அதிர்ச்சி தகவல்!

கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் வலுவான அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியில் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியில் ஓடிவந்தனர்.மேலும் கவுகாத்தி, அகர்தலா, ஷில்லாங் உள்ளிட்ட இடங்களிலும் லேசான நில அதிர்வு பதிவானது. நிலநடுக்கத்தால் இந்தியாவில் இதுவரை எந்த உயிர்சேதமும் அல்லது பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!