அருணாச்சல பிரதேசத்தில் 3.7 ரிக்டர் லேசான நிலநடுக்கம்!

 
நிலநடுக்கம்
 

அருணாச்சல பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது 28.72 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 95.61 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை பகுதியில் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், மக்கள் மத்தியில் லேசான பதற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!