அதிகாலையில் அதிர்ந்த வீடுகள் - வங்கதேசத்தில் நிலநடுக்கத்தால் மக்கள் பீதி!

 
நிலநடுக்கம் வங்கதேசம் நிலநடுக்கம் வங்கதேசம்

வங்கதேசத்தின் தென்மேற்குப் பகுதியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான சொத்துச் சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.

இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) மற்றும் வங்கதேச வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி இன்று அதிகாலை 4:36 மணி (வங்கதேச நேரப்படி). ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளது.

வங்கதேசத்தின் சத்கிரா (Satkhira) மாவட்டம், காலிகஞ்ச் உபாசிலா பகுதியில் மையம் கொண்டிருந்தது. பூமியின் அடியில் சுமார் 150 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. இந்த நிலநடுக்கம் வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. வங்கதேசத்தில் சத்கிரா, குல்னா, மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

லடாக், ஜம்மு – காஷ்மீரில்  நிலநடுக்கம்!

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் எல்லையைத் தாண்டி இந்தியாவிலும் எதிரொலித்தது. குறிப்பாக, மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா, ஹூக்ளி, நாடியா மற்றும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டதாக மக்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால், உறக்கத்திலிருந்த மக்கள் கட்டில்கள் குலுங்கியதை உணர்ந்து அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். "கட்டில் லேசாக அசைந்ததை உணர முடிந்தது, பாட்டில்கள் கீழே விழுந்தன" எனப் பாதிக்கப்பட்ட பகுதியினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நிலநடுக்கம் அதிக ஆழத்தில் (150 கி.மீ) நிகழ்ந்ததால் பெரிய அளவிலான பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

வங்கதேசம், இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய மூன்று நிலத்தட்டுக்கள் (Tectonic Plates) சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளதால், அடிக்கடி இத்தகைய நில அதிர்வுகளைச் சந்தித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 1-ம் தேதியும் 3.0 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் அங்கு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!