அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்!
அருணாச்சல பிரதேசம் காமெங் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காலை 5.34 மணியளவில் (இந்திய நேரப்படி) ரிக்டர் அளவில் 3 ஆக பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கம் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. அதன் மையம் 27.53 டிகிரி வடக்கு, 92.85 டிகிரி கிழக்கு தீர்க்கரேகைகளில் இருந்தது. அதன் பின்னர், ஒரே நாளில் காலை 5.35 மணியளவில் ரிக்டர் 3.1 அளவில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது.

இரு நிலநடுக்கங்களாலும் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். ஆனால், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகள் பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
