திபெத்தில் அடுத்தடுத்து இரட்டை நில அதிர்வு... பீதியில் பொது மக்கள்!
இமயமலை வடக்கே உயரத்தில் அமைந்த திபெத்தில் இன்று புதிதாக நிலம் அதிர்ந்தது. கடந்த ஜனவரி 7ஆம் தேதி ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 120க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், இன்று நடந்த நில அதிர்வுகள் அப்பகுதி மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்திய நேரப்படி காலை 5.54 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4 என்று பதிவு செய்யப்பட்ட முதல் நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. 33.33° வடக்கு அட்சரேகை, 86.82° கிழக்கு தீர்க்கரேகை ஆகிய இடங்களில்தான் அதின் மையப் புள்ளி இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மாலை 5.29 மணிக்கு ரிக்டர் அளவில் 5 ஆக மேலும் ஒரு அதிர்வு பதிவாகியது. தொடர்ந்து ஏற்பட்ட இந்த இரண்டு நில அதிர்வுகளும் அப்பகுதி மக்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளன. சேதம் மற்றும் உயிர் இழப்பு தொடர்பான விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
