காபூலில் 3 நாட்களில் 3 வது முறையாக நிலநடுக்கம்… மக்கள் அச்சம்!

 
நிலநடுக்கம்
 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை 11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், 100 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. கடந்த 3 நாட்களில் இது 3-வது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கமாகும்.

கடந்த 3-ந் தேதி இரவு 11 மணியளவில் இதே பகுதியில் 3.7 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அதே நாளில் மாலை 6.33 மணியளவில் 4.2 அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் பதிவாகியது. அதன் மைய ஆழம் 140 கி.மீ. ஆக இருந்தது.

இதற்கு முன் கடந்த நவம்பர் 4-ந் தேதி 6.3 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொடர்ச்சியாக ஏற்படும் நிலநடுக்கங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!