லடாக்கில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்… !
லே லடாக் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 11.51 மணியளவில் ரிக்டர் அளவில் 5.7 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 171 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
EQ of M: 5.7, On: 19/01/2026 11:51:14 IST, Lat: 36.71 N, Long: 74.32 E, Depth: 171 Km, Location: Leh, Ladakh.
— National Center for Seismology (@NCS_Earthquake) January 19, 2026
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/aM3LeQCF8Y
36.71 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 74.32 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை பகுதிதான் மையமாக இருந்தது. நிலநடுக்கம் சில விநாடிகள் நீடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிர்வால் வீடுகள் குலுங்கியதாக மக்கள் தெரிவித்தனர்.
முன்னதாக இன்று காலை டெல்லியில் 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் டெல்லி மற்றும் லடாக் பகுதிகளில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
