நள்ளிரவில் தொடர் நிலநடுக்கங்கள்… வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்!

 
நிலநடுக்கம்
 

சிக்கிம் மாநிலம் மற்றும் வடவங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிக்கிமின் கியால்ஷிங் பகுதியை மையமாகக் கொண்டு முதல் நில அதிர்வு பதிவானது. இந்த அதிர்வு மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங், காளிம்பொங், மிரிக், சிலிகுரி உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. மேலும் நேபாளம், சீனா, திபெத்தின் சில பகுதிகளிலும் அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது.

நிலநடுக்கம்

தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இன்று நள்ளிரவு 1.09 மணியளவில் 4.5 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 1.15 மணிக்கு கேங்டாக் பகுதியில் 3.1 ரிக்டர் அளவில் அதிர்வு உணரப்பட்டது. பின்னர் மங்கன் பகுதியில் 2.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. நாம்ச்சி பகுதியில் 3.9 மற்றும் 4.0 ரிக்டர் அளவிலும் அதிர்வுகள் ஏற்பட்டன. இதே நேரத்தில் திபெத் பகுதியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்கம் வங்கதேசம்

இந்த தொடர் நில அதிர்வுகள் காரணமாக மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். பலர் நள்ளிரவில் வீடுகள் மற்றும் ஹோட்டல்களை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சம் அடைந்தனர். தற்போது வரை பெரிய அளவில் உயிரிழப்பு அல்லது கட்டிட சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இதேபோல் மியான்மரில் இன்று காலை 6.03 மணிக்கு 4.9 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நில அதிர்வுகளை நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!