5.4 ரிக்டர் அளவில் வங்கதேசத்தில் நிலநடுக்கம்... கொல்கத்தா வரை அதிர்வு!
வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து சுமார் 188 கி.மீ தொலைவில் இன்று மதியம் 1.30 மணியளவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அதிர்வு காரணமாக அண்டை நாடான இந்தியாவின் சில பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிப்பு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

மேற்கு வங்கம் மாநிலத்தின் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததாக உள்ளூர்வாசிகள் கூறினர். திடீர் அதிர்வால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். சில நிமிடங்கள் பதற்றமான சூழல் நிலவியது.

இதற்கு முன்பு, சிக்கிம் மாநிலத்தில் மதியம் 12.02 மணியளவில் 2.7 ரிக்டர் அளவில் லேசான நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. வடகிழக்கு பகுதிகளில் தொடர்ந்து நிலஅதிர்வுகள் ஏற்படுவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி வங்கதேசத்தில் ஏற்பட்ட 5.7 ரிக்டர் நிலநடுக்கத்தில் பலி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
