ஒடிசா முதல் மணிப்பூர் வரை அடுத்தடுத்து தொடர் நிலநடுக்கம்... பீதியில் பொதுமக்கள்!

 
நிலநடுக்கம் நிலநடுக்கம்


ஒடிசா மாநிலத்தின் கோராபுட் பகுதியில் நேற்று நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சரியாக 11 மணி 31 நிமிட அளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.4 புள்ளிகளாகப் பதிவாகி உள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பூமியின் உட்புறத்தில் சுமார் 5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததால் அதன் தாக்கம் பரவலாக உணரப்பட்டது. தூக்கத்தில் இருந்த மக்கள் திடீரெனப் பூமி குலுங்கியதால் அதிர்ச்சியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

திபெத் நிலநடுக்கம்

ஒடிசாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே மணிப்பூர் மாநிலத்திலும் பூமி அதிர்ந்தது அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது. ஒடிசாவைத் தொடர்ந்து அடுத்த 3 நிமிட இடைவெளியில் அதாவது இரவு 11 மணி 34 நிமிட அளவில் மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 புள்ளிகளாகப் பதிவாகியுள்ள நிலையில் அடுத்தடுத்து வட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது பொதுமக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இயற்கையின் இந்தத் திடீர் சீற்றத்தால் கட்டடங்கள் லேசாகக் குலுங்கிய போதிலும் உயிர்ச் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை என்பது சற்றே நிம்மதியளிக்கும் விஷயமாகும்.

தொடர்ச்சியாகப் பல்வேறு இடங்களில் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் நில அதிர்வு கண்காணிப்பு மைய அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். மலைப்பாங்கான மற்றும் வனப்பகுதிகள் அதிகம் கொண்ட இந்தப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து உள்ளூர் வருவாய்த் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். அடுத்தடுத்து உணரப்பட்ட இந்த நில அதிர்வுகள் காரணமாகப் பொதுமக்கள் நள்ளிரவில் உறக்கமின்றித் தவித்ததோடு மீண்டும் நிலநடுக்கம் வருமோ என்ற அச்சத்திலேயே பொழுதைக் கழித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!