குஜராத்தில் 3.7 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்... வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்!

 
நிலநடுக்கம் நிலநடுக்கம்

 

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அங்குள்ள மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கட்ச் மாவட்டத்தின் துதாய் கிராமத்திற்கு அருகே அதிகாலை நேரத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 3.7 ஆகப் பதிவாகியுள்ளதாகக் காந்திநகரில் உள்ள நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் (ISR) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

லடாக், ஜம்மு – காஷ்மீரில்  நிலநடுக்கம்!

இந்த நிலநடுக்கமானது பூமியின் உட்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதிகாலையில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, திடீரென வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டதாலும், ஜன்னல்கள் அதிர்ந்ததாலும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், 'நிலநடுக்கம்.. நிலநடுக்கம்..' என அலறியபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

நிலநடுக்கம்

அதிர்ஷ்டவசமாக இந்த நில அதிர்வினால் உயிர் சேதமோ அல்லது கட்டிடங்களுக்குப் பெரிய அளவிலான பாதிப்புகளோ ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், நிலநடுக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள மண்டலத்தில் இந்தப் பகுதி அமைந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதிகாலையிலேயே ஏற்பட்ட இந்த திடீர் நில அதிர்வு ஒட்டுமொத்த குஜராத் மாநிலத்திலும் தற்காலிகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்