ஈஸ்டர், வார விடுமுறை,தடைக்காலம்... மீன்களின் விலை கடும் உயர்வு!

 
மீன் கடை மார்க்கெட் அசைவம்


சனி, ஞாயிறு வார விடுமுறை, நாளை ஈஸ்டர் பண்டிகை, மீன் பிடி தடைக்காலத்தால் மீன்கள் வரத்து குறைவு என்று பல காரணங்களால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மீன்

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள போதும், மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. 

கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் வருகிற ஜூன் 14ம் தேதி வரை மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தமிழகம் முழுவதும் மீன்பிடி தடைக்காலம் துவங்கி உள்ளது இதன் காரணமாக தமிழக முழுவதும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. பாரம்பரிய நாட்டுப் படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர் சென்று வருகின்றனர். 

இந்நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகுகள், நாளை ஈஸ்டர் பண்டிகை என்பதால் இன்று கரை திரும்பின. இந்நிலையில் தொடர் விடுமுறை என்பதாலும் மீன்களை வாங்க பொது மக்களின் கூட்டம் அலைமோதியது. மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.

மீன் மீன்கள் இறைச்சி மீனவர்கள

சீலா மீன் கிலோ ரூ.1,300 வரையும் விளைமீன், ஊழிமீன், பாறை ஆகிய மீன்கள் கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரையும் நகரை கிலோ ரூ.300 வரையும் நன்டு கிலோ ரூ.600 வரையும் கேரை, சூரை, குறுவளை ஆகிய மீன்கள் கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையும் விற்பனையானது. சாலை மீன் ஒரு கூடை ரூ.2,500 வரை விற்பனையானது 

இதே போன்று ஏற்றுமதி ரக மீன்களான பன்டாரி, தம்பா, கிளை வாளை ஆகியவை கிலோ ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனையானது. விலை உயர்ந்து காணப்பட்டாலும் விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?