மீன் குழம்பு சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு வாந்தி, மயக்கம்... ஒருவர் பலி!

 
கேரளா மீன் குழம்பு கேரளா மீன் குழம்பு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள குரும்புரம் கிராமத்தில் நேற்று இரவு ஒரு வீடே சோகத்தில் மூழ்கும் படி ஒரு பயங்கரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் சமைத்த மீன் குழம்பை ஆசையாகச் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு அடுத்தடுத்து வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு விரைந்து அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 65 வயதான மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற 5 பேருக்கும் மருத்துவர்கள் தற்போது தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில் அவர்களது உடல்நிலை குறித்து உறவினர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஏப்ரல் 09-ந்தேதி இரவு உணவுக்குப் பிறகுதான் இந்த உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்பதை பாதிக்கப்பட்டவர்கள் வாக்குமூலமாகத் தெரிவித்துள்ள நிலையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த வீட்டில் இருந்த உணவு மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த மூதாட்டியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவு வந்த பின்னரே இறப்புக்கான உண்மையான காரணம் என்ன என்பது முழுமையாகத் தெரியவரும். ருசியான மீன் குழம்பு சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தையே நிலைகுலைய வைத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்