தாக்குதல் எதிரொலி... எல்லையில் பதற்றம்... முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவு!

 
இந்திய ராணுவம் முப்படை காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதலாக கருதப்படும் நிலையில், முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் காஷ்மீர்,  ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பெஹல்காம் மலைப்பகுதியில், சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

காஷ்மீர்

இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வால், உளவுத்துறை அதிகாரி மணீஷ் ரஞ்சன், கர்நாடகாவை சேர்ந்த பங்குச்சந்தை நிபுணர் மஞ்சுநாத் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதலாக கருதப்படுகிறது.

குறிப்பாக பயங்கரவாதிகள் ஒவ்வொருவரின் பெயரை கேட்டு, அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர் என அறிந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கொலை செய்யப்பட்ட அனைவரும் ஆண்களே. பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்திய இடத்துக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று அங்கு ஹெலிகாப்டர், டிரோன் உதவியுடன் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான நிலைமை குறித்து நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பாதுகாப்பு த்துறை ராஜ்நாத் சிங் ஆகியோர் அனைத்துக் கட்சிகளுடனும் பேச இருப்பதாக கூறப்படுகிறது.

காஷ்மீர்

பெஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து முப்படைகளும் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பதிலடி தருவதற்கு இந்தியா தயாராக உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?