'டித்வா' புயல் எதிரொலி.. நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை!

 
விடுமுறை

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'டித்வா' புயலின் தாக்கத்தினால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை (நவம்பர் 29, 2025) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவிய 'டித்வா' புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவம்பர் 28) காலை நேரத்தில் இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்தது. இந்த புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று நாள் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

மழை

நாளை (நவம்பர் 29) வடதமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் சில மாவட்டங்களில் மிகத் தீவிரமான கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:  இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

வெள்ளம் ஆட்டோ கனமழை மழை

'டித்வா' புயலின் எதிரொலியாக, மழைப்பொழிவு மற்றும் வெள்ள அபாயத்தைத் தவிர்ப்பதற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை (நவம்பர் 29) விடுமுறை அறிவிக்கப்படுவதாகப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்களில், ஈடு செய்யும் விதமாகப் பள்ளிகளில் எந்தவிதமான சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மாநில அரசின் அறிவிப்பைப் போலவே, அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களிலும், பாதிப்புக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதேபோல், அண்டை மாநிலப் பகுதிகளான புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!