டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி.. அல்பலா பல்கலைக்கழகத்தின் ₹140 கோடி சொத்துக்கள் முடக்கம்!
கடந்த நவம்பர் 10-ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு வழக்கில், உயர்கல்வி கற்ற நபர்களே மூளையாகச் செயல்பட்டது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கின் தொடர்ச்சியாக தற்போது அந்தப் பல்கலைக்கழகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய டாக்டர் உமர், அல்பலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகப் பணியாற்றியவர். மேலும், இதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் உட்பட 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமலாக்கத்துறை தற்போது முடக்கியுள்ள சொத்துக்களில் பரிதாபாதில் உள்ள 54 ஏக்கர் நிலம், பல்கலைக்கழகக் கட்டிடங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி ஆகியவை அடங்கும். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 140 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அல்பலா அறக்கட்டளைத் தலைவர் சித்திக் மற்றும் அவரது குடும்பத்தினர், சுமார் 110 கோடி ரூபாய்க்கும் அதிகமான சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் (Money Laundering) ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் தொகை பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
