நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை: ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு முடித்து வைப்பு!

 
ஆகாஷ் பாஸ்கரன்

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாகச் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சம்பந்தப்பட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகச் செயல்பட்டதாக அமலாக்கத்துறை உதவி இயக்குநருக்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று (டிசம்பர் 15) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான உதவி இயக்குநர், நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாகச் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைக் எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.

அமலாக்கத்துறை

நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு அதிகாரி நோட்டீஸ் அனுப்பியதாகவும், அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதாகவும் கூறி, ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் அமலாக்கத்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. கடந்த விசாரணையின்போது, உதவி இயக்குநர் விகாஷ் குமார் ஆஜராகாதது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, இருவரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

அமலாக்கத்துறை

இதன்படி, இன்று (டிசம்பர் 15) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை உதவி இயக்குநர் நேரில் ஆஜரானார். அவர் தனது செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அமலாக்கத்துறை உதவி இயக்குநருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!