"முரட்டு பக்தர் தெரியும்.. இது முரட்டு அடிமை!" - எடப்பாடியை விளாசிய உதயநிதி!

 
uthaya

தஞ்சையில் இன்று நடைபெற்ற 'வெல்லும் தமிழ் பெண்கள்' மாநாட்டில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் மோடி குறித்து அனல் பறக்க விமர்சித்து பேசினார்.தஞ்சை செங்கிப்பட்டியில் திரண்டிருந்த லட்சக்கணக்கான திமுக மகளிரணித் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக மற்றும் பாஜகவை நோக்கித் தனது பாணியில் கடுமையான விமர்சனக் கணைகளைத் தொடுத்தார்.

எடப்பாடி பழனிசாமியைச் சாடிப் பேசிய உதயநிதி ஸ்டாலின், "ஒன்றிய பாஜக அரசின் அடையாளம் பாசிசம் என்றால், கடந்த கால அதிமுக அரசின் அடையாளம் அடிமைத்தனம். முரட்டு பக்தர் கேள்விப்பட்டிருப்பீர்கள், முரட்டு தொண்டர் பார்த்திருப்பீர்கள்; ஆனால் ஒரு முரட்டு அடிமையை இப்போதுதான் பார்க்கிறோம். அவர்தான் எடப்பாடி பழனிசாமி. அவர் பாஜகவின் No.1 அடிமையாகச் செயல்பட்டு வருகிறார்" என்று மிகக் காட்டமாக விமர்சித்தார்.
தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பிரதமர் மோடி விமர்சித்ததற்குப் பதிலளித்த அவர், "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பாஜகதான் ஆட்சி செய்கிறது. பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நின்றதுதான் பாஜகவின் வரலாறு. ஆனால், இவை எதையும் பார்க்காமல், மைக் என்று நினைத்துக் கண்ணாடியைப் பார்த்துப் பிரதமர் பொய் பேசியுள்ளார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது மகளிருக்கான அரசு; பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் இதுதான்" என்று பதிலடி கொடுத்தார்.


தமிழகத்திற்குள் எப்படியாவது நுழைந்துவிடலாம் எனப் பாசிஸ்ட்டுகள் கனவு காண்கிறார்கள் என்று குறிப்பிட்ட உதயநிதி, "தேர்தல் நேரத்தில் மட்டும் பிரதமர் தமிழகத்திற்கு வருகிறார். அவர்கள் எத்தனை பேர் வந்தாலும், எத்தனை வேடம் போட்டாலும் தமிழகத்தையும், திமுகவையும் தொட்டுக்கூட பார்க்க முடியாது" என்று சவால் விடுத்தார்.
"பாஜக அரசு பாசிச அரசு, அதிமுக அரசு அடிமை அரசு. ஆனால், மகளிருக்கு உரிமைத் தொகை, இலவசப் பேருந்துப் பயணம் என அவர்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்படும் திமுக அரசுதான் உண்மையான மகளிருக்கான அரசு" என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.
உதயநிதியின் இந்த 'முரட்டு அடிமை' என்ற விமர்சனம் அதிமுக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!