ஆளுநரை விமர்சிப்பது முறையல்ல.... எடப்பாடி கடும் தாக்கு!

 
ஸ்டாலின்

சட்டப்பேரவையின் 2026 முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைக்கப்படாததால் உரையை வாசிக்காமல் வெளியேறினார். இந்த நிகழ்வு பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவை

வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. ஆளுநர் உரையில் திமுக அரசு தவறான கருத்தை திணிக்கப் பார்க்கின்றனர். ஆளுநரின் உரையில் முதலமைச்சரின் கருத்துகளும் உள்ளன” என்று குற்றம்சாட்டினார். ஆளுநர் மீது தவறான எண்ணத்தை திமுக அரசு உருவாக்குகிறது என்றும், ஆளுநரின் நடவடிக்கையை விமர்சிப்பது முறையல்ல என்றும் அதிமுக அதைச் செய்யாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் “சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்குலைந்துள்ளது”, “தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று முழக்கமிட்டனர். இந்த வெளிநடப்பு மற்றும் முழக்கங்கள் பேரவையில் பெரும் அமளியை ஏற்படுத்தின. திமுக உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

சட்டப்பேரவை

எடப்பாடி பழனிசாமி மேலும் கூறுகையில், ஆளுநர் உரையில் உள்ள கருத்துகள் திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதாகவும், அதனால் அரசு ஆளுநரை அவமதிக்க முயல்வதாகவும் குற்றம்சாட்டினார். “ஆளுநரின் உரை படிக்கப்படாமல் இருப்பது அரசியலமைப்பு மரியாதைக்கு எதிரானது” என்றும் அவர் விமர்சித்தார்.இந்த நிகழ்வு தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் – அரசு இடையேயான முரண்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. ஆளுநர் உரையை சபாநாயகர் வாசிப்பார் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநரின் வெளிநடப்பு மற்றும் அதிமுகவின் வெளிநடப்பு ஆகியவை அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. தமிழக அரசியல் வட்டாரத்தில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!