அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை... வைகோ விமர்சனம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை தந்திருந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை, எடுபிடி போல்தான் இருந்தார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர் சந்திப்பில் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி குறித்து எக்காரணம் கொண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒரு 5 நிமிடமாவது வரவேற்று பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி நீடிக்குமா? கருத்து வேறுபாடு ஏற்படுமா? என்று தெரியவில்லை. பா.ஜ.க.வுக்கு எடுபிடி போல்தான் இருந்தார்கள். அ.தி.மு.க. சார்பில் ஒருவர் கூட பேசவில்லை. அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும் எனப் பேசியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!