“அதிமுகவை எடப்பாடி அடமானம் வெச்சுட்டாரு” ... பெங்களூரு புகழேந்தி வேதனை!

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தோற்று விட்டோம் என பழனிசாமியும், முன்னாள் அமைச்சர்களும் தெரிவித்தனர். அதிமுகவை ஊழல் ஆட்சி என்று கூறியவர் அமித்ஷா.
இந்நிலையில் டெல்லியில் அதிமுக அலுவலகத்தை பார்வையிடச் சென்றதாக கூறிய பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட போது, ‘ஆறு மாதங்கள் கழித்து தான் கூட்டணி குறித்து கூறுவோம்’ என்றார்.
ஆனால், அமித்ஷா சென்னை வந்ததும் பாஜக-அதிமுக கூட்டணியை பழனிசாமி அறிவித்துவிட்டார். ஜெயலலிதா இருந்த போது, ‘பாஜக-வுடன் கூட்டணி வைத்து, ஒருமுறை தவறு செய்து விட்டேன். இனி எப்போதும் அந்த தவறை செய்ய மாட்டேன்’ என்றார்.
ஆனால் அதிமுகவை பழனிசாமி அடமானம் வைத்து விட்டார். கூட்டணியில் பாஜக அதிக இடங்களில் வென்றால், மகாராஷ்டிராவின் ஷிண்டே நிலை தான் பழனிசாமிக்கு ஏற்படும். இனி அதிமுக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கிடையாது.
ஓபிஎஸ்ஸை நம்பி நாங்கள் வீணாகப் போய் விட்டோம். வீட்டிலேயே அமர்ந்து கொண்டு, ‘அதிமுக ஒருங்கிணைக்கப்படும், ஆட்சி அமைக்கும்’ என்று சசிகலா சொல்லி வந்தார். வரும் ஆண்டிலும் அதைத் தான் கூறுவார். அதிமுக கூட்டணி அறிவிக்கப்பட்ட போது, அந்த இடத்திலேயே செங்கோட்டையன் இல்லை. பாஜக - அதிமுக கூட்டணி மீது, மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
இனி யாரையும் நம்பி அதிமுக தொண்டர்கள் இல்லை. கொடி எடுக்கும் தொண்டர்கள் முடிவெடுப்பார்கள் தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்களை நியமித்து பணியாற்ற உள்ளனர். இதில் அதிமுகவின் தலைவர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் என அனைவரும் ஒன்று சேர்வர், புரட்சி வெடிக்கும். எம்ஜிஆர் அம்மா ஆட்சி அமைப்போம்” என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!