செங்கோட்டையன் கோட்டைக்குள் எடப்பாடி... நவ.30ல் கோபிசெட்டிபாளையத்தில் பிரச்சாரம்!

 
செங்கோட்டையன் செங்கோட்டையன்

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், தனது 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தொடர் பிரச்சாரத்தின் அடுத்த கட்டத்தை மீண்டும் தொடங்குகிறார்.இந்த முறை செங்கோட்டையன் கோட்டையான கோபிசெட்டிபாளையத்தில் இருந்து தனது  பிரச்சாரத்தைத் துவங்குகிறார்.

செங்கோட்டையன்

இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற நோக்கத்துடன், கடந்த ஜூலை 7, 2025 முதல் அக்டோபர் 10, 2025 வரை 174 சட்டமன்றத் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டிருந்தார். இந்தச் சுற்றுப் பயணத்தின் போது மக்கள் திரண்டு வந்து அவருக்கு அளித்த வரவேற்பு அனைவரையும் பிரம்மிக்க வைத்தது.

இதன் தொடர்ச்சியாக, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கோபிசெட்டிபாளையம், முத்துமஹால் திருமண மண்டபம் அருகில் இந்த பொதுக்கூட்டம் நவம்பர் 30, 2025 (ஞாயிற்றுக் கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.

செங்கோட்டையன்

இக்கூட்டத்தில் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார். குறிப்பாக, இந்தக் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள கோபிசெட்டிபாளையம் தொகுதி, சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் அவர்களின் சட்டமன்றத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!