"சட்டம்-ஒழுங்கு பாதாளத்திற்கு சென்று விட்டது" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

 
இபிஎஸ் எடப்பாடி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பாதாளத்திற்குச் சென்றுவிட்டது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த தொடர் குற்றச் சம்பவங்களைக் குறிப்பிட்டு அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

எடப்பாடி

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மோதலில் தாக்கப்பட்ட +2 மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பள்ளி மாணவர்கள் இடையே படிப்புக்கு பதில் வன்முறைப் போக்கு வளர்ந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் எடைத் தராசால் அடித்துக் காய்கறிக் கடைக்காரர் கொலை. தென்காசியில் சொத்துத் தகராறில் விவசாயி வெட்டிப் படுகொலை. சேலம் தோப்பூர் பகுதியில் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் தலையைத் தேடும் போலீசார். நாகர்கோவிலில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்துத் திருட முயற்சி.

எடப்பாடி இபிஎஸ்

இந்தத் தொடர்ச்சியான செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாகவும், விவசாயி, வியாபாரி, பெண், இளைஞர் என யாருக்குமே பாதுகாப்பு இல்லாத ஒரு அவலத்தின் மொத்த உருவான ஆட்சியைத்தான் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டதால் தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீர்கெட்டு உள்ளதாகவும், சுய விளம்பரத்தில் திளைக்கும் முதலமைச்சர் இதை எப்போது தான் உணரப் போகிறாரோ என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஆட்சியில் இருக்கப் போகும் எஞ்சிய காலத்திலாவது சட்டம்-ஒழுங்கின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று தி.மு.க. அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!