"முதல்வர் பதவி: அதிர்ஷ்டமல்ல, உழைப்பால் கிடைத்தது" - எடப்பாடி பழனிசாமி
தமிழக அரசியலில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆன தருணம் குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தன்னை 'தற்செயலாக' முதலமைச்சரானவர் என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலளித்த இபிஎஸ், "நான் அடிமட்டத் தொண்டனாகக் கட்சியிலிருந்து படிப்படியாக வளர்ந்தவன். கிளைச் செயலாளர் முதல் இன்று பொதுச்செயலாளர் வரை உழைப்பால் உயர்ந்திருக்கிறேன்."
"சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றேன் என்று கூறுவது தவறு; அன்றைய அரசியல் சூழலில் எம்.எல்.ஏ-க்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் ஜனநாயக முறைப்படி நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்" என்று அவர் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளார்.

2017ல் அவர் பதவியேற்றபோது, இந்த ஆட்சி ஒரு சில மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று அரசியல் விமர்சகர்களும், எதிர்க்கட்சிகளும் கணித்திருந்தனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் கடும் எதிர்ப்புகளையும் தாண்டி, 4 ஆண்டுகள் 2 மாதங்கள் வெற்றிகரமாக ஆட்சியை நடத்தியதை அவர் தனது சாதனையாகக் குறிப்பிடுகிறார்.
"எந்தப் பின்னணியும் இல்லாத ஒரு விவசாயி, இத்தனை சோதனைகளையும் கடந்து ஆட்சியை நிறைவு செய்ததுதான் உண்மையான வெற்றி" என குறிப்பிட்ட இபிஎஸ், திமுக மற்றும் பிற கட்சிகள் அடிக்கடி 'கூவத்தூர்' சம்பவத்தைச் சுட்டிக்காட்டி விமர்சிப்பது குறித்து பேசுகையில், அன்றைய சூழலில் அதிமுக ஆட்சியைக் காப்பாற்றவும், கட்சி உடையாமல் இருக்கவும் எடுக்கப்பட்ட ஒரு தற்காப்பு நடவடிக்கையே அது என்றும், அது முதலமைச்சர் பதவியின் புனிதத்தைக் குறைக்காது என்றும் வாதிடுகின்றனர்.

தான் ஒரு 'நிர்வாகத் திறன் கொண்ட முதல்வர்' என்ற பிம்பத்தை மீண்டும் மக்களிடம் கொண்டு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். அவரது நான்கு கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7.5% இட ஒதுக்கீடு, குடிமராமத்துத் திட்டங்கள் மற்றும் கொரோனா கால மேலாண்மை ஆகியவற்றை முன்னிறுத்தி, மீண்டும் முதலமைச்சர் பதவியைப் பிடிக்கத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
