கிறிஸ்துமஸ் பெருவிழா: எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுதினம் பிரம்மாண்டக் கொண்டாட்டம்!

 
எடப்பாடி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி, இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற உள்ளது. கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் இந்த விழா நடைபெறுகிறது என்று அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எடப்பாடி இபிஎஸ் பொதுக்குழு

நாளை மறுதினம், அதாவது டிசம்பர் 18, 2025 வியாழக்கிழமை, மாலை 4.30 மணியளவில் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. லைட் ஆடிட்டோரியத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், கிறிஸ்தவப் பெருமக்களைக் கௌரவிக்கும் விதமாகத் தொடங்கிய இந்தக் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை, ஜெயலலிதாவைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் நடத்தி வருகிறார். அ.தி.மு.க. சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் விளங்கி வருவதாகக் கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

இந்நிகழ்ச்சியில், கிறிஸ்தவப் பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள் மற்றும் கிறிஸ்தவப் பெருமக்களும் கலந்து கொள்கின்றனர். இவர்களுடன், அ.தி.மு.க. தலைமைக்கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டப் பல முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!