டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி சந்திப்பு - 2026 தேர்தலுக்கான 'மாஸ்டர் பிளான்'!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை டெல்லி சென்றடைந்த நிலையில், இரவு சுமார் 10:15 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக இந்த ஆலோசனைக் கூட்டம் நீடித்தது.
ஏற்கனவே பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி முடிவான நிலையில், நேற்று இணைந்த பா.ம.க. குறித்தும், இன்னும் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ள தே.மு.தி.க. உள்ளிட்ட பிற கட்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அமித்ஷா ஏற்கனவே குறிப்பிட்டது போல, வரும் 10 நாட்களுக்குள் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் சுமார் ரூ.4 லட்சம் கோடி அளவில் ஊழல் நடந்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த அறிக்கையின் நகல் அமித்ஷாவிடம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அமைப்புகள் மூலம் விசாரணை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தி.மு.க. மற்றும் விஜய்யின் த.வெ.க. ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டிய பலமான தேர்தல் வியூகம் குறித்தும் இருவரும் விவாதித்துள்ளனர்.

தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியே தி.மு.க.-வை வீழ்த்தச் சரியான பலமாக இருக்கும் எனப் பா.ஜ.க. மேலிடம் கருதுகிறது. இதற்காகவே பியூஷ் கோயல் தலைமையிலான குழு அடிக்கடி சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்தியது. வட தமிழகத்தில் பாமவிற்கு இருக்கும் செல்வாக்கை அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது குறித்து அமித்ஷா சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார். வரும் நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
