ஒரே மேடையில் எடப்பாடி - மோடி - அன்புமணி... மோடியின் சங்கநாதம் மதுரையிலிருந்து சென்னைக்கு இடமாற்றம்!

 
மோடி

தமிழக அரசியலில் 2026 தேர்தல் அனல் தகிக்கும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடியின் வருகை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி 23ம் தேதி மதுரையில் நடைபெறுவதாக இருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம், திடீரென சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதலில் மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள அம்மா திடலில் இந்தக் கூட்டத்தை நடத்தப் பாஜாக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ஆனால், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பிரதமர் கலந்துகொண்டால், அது மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அரசியல் எழுச்சியை (Political Momentum) ஏற்படுத்தும் என பாஜக மற்றும் அதிமுக மேலிடம் கருதியதால் இந்த இடமாற்றம் நிகழ்ந்துள்ளது.

ஜனவரி 23-ல் சென்னையில் நடைபெறவுள்ள இந்த முதல் தேர்தல் பொதுக்கூட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த மேடையில் பிரதமர் மோடியுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கான 'விஷன் 2026' திட்டத்தைப் பிரதமர் மோடி இந்த மேடையில் முறைப்படி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபுறம் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் நடந்தாலும், மறுபுறம் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் அனல் பறக்கின்றன. பாஜக தரப்பில் 56 தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு கேட்கப்படுவதாகத் தகவல்கள் கசிகின்றன. ஆனால், அதிமுகவோ 30 முதல் 35 இடங்கள் மட்டுமே தர முடியும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த முட்டல் மோதல்களுக்கு மத்தியில்தான் பிரதமரின் இந்தப் பயணம் அமையவுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!