தமிழக தொழில்துறை தோல்வியடைந்து விட்டது... எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
Jun 30, 2025, 20:30 IST
தமிழக தொழில்துறை தோல்வியடைந்துவிட்டதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திமுக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைத் தாண்டிச் செல்லத் தவறியதால், நமது தொழில்துறை இயந்திரம் செயலிழந்து போயுள்ளது. நமது தொழில்முனைவோர் காத்திருக்கிறார்கள். நமது இளைஞர்கள் இடம்பெயர்கிறார்கள். நமது முதலீட்டாளர்கள் வேறு இடத்திற்கு செல்கிறார்கள்.

இதை மாற்ற அதிமுக உறுதிபூண்டுள்ளது. இந்தியாவின் அடுத்த கட்ட தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு தலைமை தாங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதுவே சரியான நேரம் என்று கூறியுள்ளார்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
