ஜூலை 7 முதல் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப் பயணம்!
Jun 27, 2025, 20:45 IST

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் ஜூலை 7ம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி வருகிற ஜூலை 7ம் தேதி முதல் தேர்தல் சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார். முதற்கட்டாக 7 மாவட்டங்களில் 34 சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!